25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >> புது பஸ் ஸ்டாண்டிலிருத்து  ராஜபாளையத்தில் இணைப்பு சாலை திறப்பு . >> ரோட்டின் வெள்ளைக்கோடு வெளியே வரை ,ஆக்கிரமிப்புகளால் முடங்கும் முடங்கியாறு ரோடு . >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில்பத்தாம் திருநாள் பஞ்ச மூர்த்தி புறப்பாடு. >> அருள்மிகு சொக்கர் கோவில் என்ற ஸ்ரீ மீனாக்ஷி சுந்தரேச்வரர் திருக்கோவில் ஒன்பதாம் நாள் தேர்த்திருவிழா. >>


யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையரில்,  இத்தாலி ஜோடிக்கு கோப்பையுடன், ரூ. 8.72 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யு.எஸ்., ஓபன் டென்னிஸ் கலப்பு இரட்டையரில்,  இத்தாலி ஜோடிக்கு கோப்பையுடன், ரூ. 8.72 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

. யு.எஸ்., ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நியூயார்க்கில் ,கலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் போலந்தின் இகாஸ்வியா டெக், நார்வேயின் காஸ்பர் ரூட் ஜோடி, 'நடப்பு சாம்பியன்' இத்தாலியின் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடியை சந்தித்தது.இத்தாலி ஜோடி முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றியது. ஸ்வியா டெக், காஸ்பர் ரூட் ஜோடி, 2வது செட்டை 7-5 என தன் வசப்படுத்தியது.

வெற்றியாளரை நிர்ணயிக்கும் சூப்பர் டை பிரேக்கரில்' இத்தாலி ஜோடி 10-6 என வென்றது.  ஒரு மணி நேரம்,32 நிமிடம் நீடித்த போட்டியில் சாரா இரானி, ஆன்ட்ரியா வவாசோரி ஜோடி 6-3, 5-7, 10-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று, யு.எஸ்., ஓபனில் தொடர்ந்து 2வது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது..

இந்த ஜோடி கைப்பற்றிய 3வது கிராண்ட்ஸ்லாம் பட்டம். ஏற்கனவே இந்த ஆண்டு பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்றிருந்தது. இத்தாலி ஜோடிக்கு கோப்பையுடன், ரூ. 8.72 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News